/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/302_22.jpg)
லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ் படங்களில் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். பின்பு 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' என மொத்தம் நான்கு படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்தப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் முறையாக லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)