Advertisment

முதல் முறையாக ரசிகர்களை மகிழ்விக்க ஆண்ட்ரியா எடுத்த புது முயற்சி!

 'First Time' - Andrea's new venture to entertain fans in mysskin in 'pisasu 2' movie

Advertisment

தமிழ்சினிமாவில்தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தமிஷ்கின்தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ராக்ஃபோர்ட்எண்டர்டெயின்மெண்ட்' சார்பில்முருகானந்தம்தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின்டீசர்வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைபெற்றது. இதனையடுத்துபோஸ்ட்ப்ரொடக்ஷன்பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்சமீபத்தில்விஜய் சேதுபதி இப்படத்தின்டப்பிங்பணிகளை முடித்தார்.

இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் புதியஅப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் தெலுங்கு பதிப்பின்டப்பிங்பணிகளை ஆண்ட்ரியா முடித்துள்ளார். இப்படத்திற்காக முதல் முதலில் தெலுங்கில்டப்பிங்பேசியுள்ளதாகதெரிவித்துள்ள அவர், இது தொடர்பானவீடியோவையும்தனது சமூகவலைதளப்பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.

தமிழில் பல படங்களுக்குடப்பிங்பேசியுள்ள ஆண்ட்ரியா தற்போது தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த புது முயற்சியை எடுத்துள்ளார். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில்டப்செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

pisasu part 2 director mysskin Andrea Jeremiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe