ஆஸ்கர் விழாவில் கவனம் ஈர்த்த பழங்குடியின தம்பதியின் வாழ்க்கை

first tamil movie gets to oscars award

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது விழா இந்தாண்டும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. ஆஸ்கர் விருது பெறுவது என்பது ஒவ்வொரு கலைஞனின் கனவு எனக் கூறலாம். இந்தக் கனவு பலருக்கும் கனவாகவே தற்போது வரை இருந்து வருகிறது. ஆனால்அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறது 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. ஆவணக் குறும்படமாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளிஎன்ற இரு பழங்குடிகளைப் பற்றியகதை.

இந்த நிலையில் இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் வசித்து வரும் இயக்குநர் கார்த்திகி ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்டவர். இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக அந்த பழங்குடியின மக்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆஸ்கருக்கு முன்னதாக ஐடிஏ ஆவணப்பட விருதுகள் (IDA Documentary Awards), ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது (Hollywood Music in Media Awards) உள்ளிட்ட சர்வதேச விருதுகளில் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தது. 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் விருது பெற்றிருந்தாலும் பெரிய படத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழ் சினிமாவிலிருந்துதெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹேராம், விசாரணைமற்றும் கடைசியாக அனுப்பப்பட்ட கூழாங்கல்என பல்வேறு படங்களை அனுப்பியிருந்தாலும் எதுவுமே நாமினேஷன் பட்டியலில் கூட இடம் பெற்றதில்லை. இதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றிருந்தாலும் தமிழ் அல்லது இந்திய படைப்புகளுக்காக பெற்றதில்லை. 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

95th Oscars awards kollywood oscar awards
இதையும் படியுங்கள்
Subscribe