தமிழில் 'உன்னாலே உன்னாலே' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர் 'வினய்'. தமிழில் சமீபத்தில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் 'ஓ மை டாக்' படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தெலுங்கில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகிவரும் 'ஹனுமான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வினய் நடித்துவருகிறார். கதாநாயகியாக அமிர்தா நடிக்க வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்' தயாரித்துவரும் இப்படத்திற்கு அனுதீப் தேவ் இசையமைக்கிறார். முதல் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் இப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
இந்நிலையில் 'ஹனுமான்' படத்தில் வினய் ராயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டைலான கெட்டப்பில் கெத்தான வில்லன் போல் இந்த போஸ்டரில் வினய் உள்ளார். மேலும் 'மைக்கல்' என்ற கதாபாத்திரத்தில் வினய் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.