Advertisment

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் ‘இறுகப்பற்று’; வெளியான ஃபர்ஸ்ட் லுக்

First look poster released on Irugapatru movie

பிரபல தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ்,'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானதிரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது.

Advertisment

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்ததயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர். மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றிப் பேசும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கார்த்திக் நேதா பாடல்களைஎழுதியுள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

“நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாகப் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது. திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலைப் பற்றித்தெரிந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்வின் மூலம் தம்பதிகளிடையே நேர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பு வீடியோ விரைவில் வெளியிடப்படும் என்றும், ‘இறுகப்பற்று' திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

vikram prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe