Advertisment

கார்த்தி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - இணையத்தில் வைரல்

கார்த்தி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இணையத்தில் வைரல்

வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. ராணா ப்ரொடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை வினோத் குமார் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'லத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிடுவார் என கூறப்பட்டது. அதன் படி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 'லத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கையில் லத்தியுடன் உடம்பில் காயங்களுடன் விஷால் நிற்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor karthi actor vishal sunaina yuvanshankarraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe