/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_353.jpg)
தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து இவர் நடிப்பில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' மற்றும் 'மாயவன்' ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்ததாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் 'மைக்கேல்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கவுதம் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி மற்றும் படக்குழு அனைவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படம் தெலுங்கில் உருவாகி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)