First look poster release of Vijay Antony movie

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கதாநாயகனாக தற்போது 'அக்னிசிறகுகள்', 'ரத்தம்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ படத்தில் நடித்து வருகிறார். டி.என். தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக “வள்ளி மயில்” உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Advertisment

இந்நிலையில் 'வள்ளி மயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போஸ்டரில் விஜய் ஆண்டனி, சத்யராஜ் மற்றும் ஃபரியா அப்துல்லா இடம்பெற்றுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment