Advertisment

மஞ்சு வாரியார் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

The first look poster of the next movie starring Manju Warrier has been released

இந்தியாவில் ஒளிப்பதிவிற்காக அதிக முறை தேசிய விருது வாங்கியவர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே தமிழில் 'அசுரன்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் இடம் பிடித்த மஞ்சு வாரியர் மற்றும் மலையாளம் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர்களைவைத்து படம் இயக்கி வருகிறார். தமிழில் 'சென்டிமீட்டர்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மணிரத்னம் தனது தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீஸ்' ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டரில் காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியரோடு யோகி பாபுவும் இடம்பெற்றுள்ளார்.சந்தோஷ் சிவன், 2017-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாநகரம்' படத்தை இந்தியில் 'மும்பைக்கார்' என்ற தலைப்பில் ரீமேக் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

kalidas manirathnam manju warrier santhosh sivan yogibabu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe