கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கும் படம் கோப்ரா. இந்த படத்தை டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்துதான் இயக்குகிறார்.

பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் மொத்தமாக ஏழு வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் மொத்தமாக 15 கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ளதாகத் தகவல் முன்பு வெளியானது. ஆனால், அதுக்குறித்து படக்குழு இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை.