விஷால் நடிக்கும் படப்பிடிப்பில் லாரி மோதி தீ விபத்து - வைரலாகும் வீடியோ

fire accident in vishal mark antony shoting spot

'லத்தி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்த படக்குழு, நடிகை அபிநயா 'வேதா' என்ற கதாபாத்திரத்திலும், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி ‘தங்கராஜ்’ என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அவர்களது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று இரவு லாரி சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததையடுத்து எதிர்பாராத விதமாக அந்த லாரி அருகில் மோதி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vishal Mark Antony
இதையும் படியுங்கள்
Subscribe