Advertisment

டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் தீ விபத்து

fire accident in tovino thomas shooting spot

Advertisment

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ஜிதின் லால் இயக்கும் ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சீமேனியில் அரங்கம் அமைக்கப்பட்டு நடந்து வந்தது.நேற்று முன்தினம் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tovino thomas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe