Advertisment

நடிகை கனகா வீட்டில் தீ விபத்து

fire accident in actress Kanaka house

Advertisment

தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத்திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை கனகா வீட்டில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதைக்கண்ட கனகா அதிர்ச்சியுற்று உடனடியாகத்தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கனகா வீட்டிற்கு வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள்., வீட்டிலிருந்து வந்த தீயைதண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் , பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது தீப்பொறி பட்டு அருகிலிருந்த துணிமணிகளில் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Fire accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe