/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_50.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.அதில், தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தியும் பெற்று வருகிறது. தீவிரவாதிகளின் சதிகளால் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட நாயகன் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தி குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. இப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)