/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fir_5.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர்மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமாமோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'எஃப்.ஐ.ஆர்.' திரைப்படம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் முரளி இயக்கத்தில் 'மோகன் தாஸ்' படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் அடுத்ததாக நேரடி தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)