fir against singer mangli

தெலுங்கில் பிரபல நாட்டுப்புற பாடகியாக வலம் வருபவர் மங்லி. அங்கு திரைப்படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கை தவிர்த்து இந்தி மற்றும் கன்னடத்திலும் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் நேற்று(10.06.2025) தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரிபுரா ரெசார்ட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டியில் மங்லிக்கு தொடர்புடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் என கிட்டத்தட்ட 50 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் திரை பிரபலங்கள் ராச்சா ரவி, திவி, காசர்லா ஷ்யாம், பாடகி இந்திராவதி உள்ளிட்டோரும் அடங்குவர்.

Advertisment

மங்லியில் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் பார்ட்டிக்கு சென்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமான போதைப்பொருட்கள், கஞ்சா மற்றும் உயர் ரக வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மங்லி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

பார்ட்டியில் 48 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் ஒன்பது பேர் கஞ்சா பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.