Skip to main content

முழுவீச்சில் நடைபெற்றுவரும் விஷால் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

vishal

 

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

 

‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த கையோடு இப்படத்தின் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது. இரவு நேர படப்பிடிப்பில் எடுத்த காணொளியை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விஷால், ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்