Advertisment

"அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்" - நானி பேச்சு

publive-image

நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்டி சுந்தரானிகி'. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டுதமிழில் 'அடடே சுந்தரா' என்றும் மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரோகிணி, நதியா, அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தெலுங்கு ட்ரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

Advertisment

இந்நிலையில் 'அடடே சுந்தரா' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்நடைபெற்றது. நானி, நஸ்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். செய்தியாளர்களிடம் நாணி பேசுகையில், " அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். இப்படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ஜூன் மாத தொடக்கத்தில், பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதாலும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று காண வேண்டிய அற்புதமான காதலும், நகைச்சுவையும் கலந்ததிரைப்படம்தான் அடடே சுந்தரா" என பேசினார்.

Advertisment

நடிகை நஸ்ரியா பேசுகையில், " தமிழில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. அதனால் ஏதேனும் தவறு வந்து விடுமோ..! என்ற அச்சம் காரணமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Adade Sundara movie nazriya nasim naani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe