The film team of 'The GOAR' deceived the fans

Advertisment

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் என பலர் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கிலும், ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் வெளியாகவுள்ளது.

இப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் ‘விசில் போடு...’ என்ற முதல் பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி வரிகளில் விஜய்யுடன் இணைந்து யுவன் பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து, விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி ‘சின்ன சின்ன கண்கள்...’ என்ற பாடல் வெளியானது. இப்பாடலைக் கபிலன் வைரமுத்து வரிகளில் விஜய் பாடியிருந்தார். மேலும் இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரிணி குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியிருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஸ்பார்க்...’ என்ற பாடல் வெளியாகியது. இப்பாடலைக் கங்கை அமரன் வரிகளில் யுவனுடன் இணைந்து விருஷா பாலு பாடியிருந்தார். இந்த பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, இன்று (14.08.2024) மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ‘இன்று ட்ரைலர் வெளியாகும் தேதியை சொல்வதாக உறுதியளித்தேன். ஆனால் ட்ரைலரை சிறந்த முறையில் உங்களிடம் கொண்டு வருவதில், நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம். அதனால் உங்களுக்காக ஒரு சிறிய ட்ரீட்” எனப் படத்தின் புதிய போஸ்டரை மட்டும் வெளியிட்டுள்ளார். ட்ரைலர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தியின் இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.