film researcher Randor Guy passed away

பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை காலமானார். சட்ட வல்லுநராக அறியப்பட்ட இவர் திரைத்துறையில் பெரும் பங்காற்றிருக்கிறார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் அந்த வேலையை விட்டு எழுத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். 1991ஆம் ஆண்டு தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்து தமிழ் சினிமாவின் வரலாறு என்ற தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். மேலும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Advertisment

மேலும் சில ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஹாலிவுட்டில் 'டேல்ஸ் ஆஃப் தி காம சூத்ரா: தி பெர்ஃப்யூம்ட் கார்டன்' என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படம் பின்னர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. படங்களைத்தாண்டி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Advertisment

இப்படி சட்ட வல்லுநராகவும், எழுத்தாளராகவும், சினிமா வரலாற்று ஆய்வாளராகவும் பன்முக திறமை கொண்ட ராண்டார் கை, வயது மூப்பு காரணமாக தனது 85 வது வயதில் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.