Advertisment

தனுஷ் பட தயாரிப்பாளர் காலமானார்!

Film producer Narayan Das Narang passed away

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகஇருக்கும் நாராயண் தாஸ் நாரங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள இவர்தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'தனுஷ்46' படத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் 'எஸ்.கே 20' படத்தையும் தயாரித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாராயண் தாஸ் நாரங் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரதுமறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் பாபு, சீரஞ்சீவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

telugu cinema sk 20 actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe