film producer Martin Sebastian arrested in women incident

மலையாள திரையுலகில் தயாரிப்பளராக வலம் வருபவர் மார்ட்டின் செபாஸ்டின். தொழிலதிபராகவும் பயணித்து வரும் இவர் பல வகைகளில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 1986-1992 ஆண்டு காலகட்டத்தில்ஊழல் வழக்கில் மார்ட்டின் செபாஸ்டியன் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சர்ச்சைக்குரியநபராக அங்கு அறியப்படுகிறார்.

Advertisment

இதையடுத்து தனது பெயரை சி.எஸ்.மார்ட்டின் என மாற்றிக்கொண்டு திரைப்படத் தயாரிப்புகளில் தீவிரமாக இருந்து வந்தார். இதனிடையே கேரளா திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மார்ட்டின் செபாஸ்டின் தன்னிடம் பாலியல் அத்துமீறலுக்கு முயன்றதாக கூறி அவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

Advertisment

அந்தப் புகாரில், "கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், பின்பு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வயநாடு, மும்பை, திருச்சூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றுதவறாக நடந்து கொண்டார். மேலும் ரூ. 78,60,000 மற்றும் 80 சவரன் தங்கத்தை என்னிடம் வாங்கியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்துமார்ட்டினுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டாலும்விசாரணைக்காக விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜரான மார்ட்டினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.