Advertisment

"இந்தப் படம்தான் ஒரே நாளில் 60 கோடி வசூல் செய்யப் போகிறது" - தயாரிப்பாளர் தனஞ்செயன்

publive-image

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் திரைப்படமான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தின் வியாபாரம் எப்படி இருக்கும்? எத்தனை திரையரங்கில் வெளியாகும்? போன்ற கேள்விகளை தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக கேட்டோம்; அவர் அளித்த பதில் பின்வருமாறு...

Advertisment

தமிழ்நாட்டை பொறுத்தமட்டிலும் விஜய் - அஜித் என்ற இரு பெரிய நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதே சமயத்தில் தெலுங்கில் பாலையாவின் படமும் சிரஞ்சீவி படமும் வெளியாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அளவிற்கான பரபரப்பு ஆந்திராவில் இல்லை.

Advertisment

இங்கேதான் பல ஊடகங்களுக்கு இது முக்கியச் செய்தியாக உள்ளது. வாரிசுக்கு நிறையதியேட்டர் கிடைக்குமா? துணிவுக்கு கிடைக்குமா? ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் பண்றாங்களாம் என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியையும் பரபரப்பாக்குவது ஊடகங்கள்தான். அந்த பரபரப்பு இப்போது ஆடியன்சிடம் தொற்றிக் கொண்டது. புக்கிங் ஆரம்பிச்சாலே உடனே புக் பண்ணத்தயாராக இருக்கிறார்கள்.

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிசில் பெரிய ஓப்பனிங்காக இருக்கும். இதற்கு முன்பு வீரம் - ஜில்லா என்றிருந்தது; அதற்கு பிறகு பேட்டை - விஸ்வாசம் என்றிருந்தது; இப்போது துணிவு - வாரிசு என்றிருக்கிறது; இந்த இரண்டு படங்களுமே முதல் நாளே அறுபது கோடி ரூபாய் வசூல் செய்யப்போகிறது. ஆனால், அது எவ்வளவுன்னுபிரிச்சு சொல்லுங்கன்னு கேட்டால் எனக்கு தெரியாது; அது அந்தந்த ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

g dhananjayan Thunivu varisu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe