Advertisment

விஜய் ஆண்டனி படத்தின் டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Film crew releases teaser update of Vijay Antony movie

Advertisment

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் வெளியானது. தொடர்ந்து 'கொலை', 'மலை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நவீன் இயக்கத்தில் 'அக்னிக் சிறகுகள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் விஜய் மற்றும் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அம்மா க்ரியேஷன்' சார்பாக டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை (27.05.2022) வெளியாகும் என இயக்குநர் நவீன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் 'ஜ்வாலா' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

agni siragugal akshara haasan arun vijay naveen vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe