Advertisment

'தளபதி 66' பட பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

The film crew released the video of 'Thalapathy 66' Pooja

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Advertisment

இதை அடுத்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 66' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதனை 'தளபதி 66' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் தனது யூ டியூபில் பகிர்ந்துள்ளார். விஜய், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

rashmika mandana thalapathy 66 actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe