The film crew released the Vidamuyarchi movie update!

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ‘சவதீகா...(Sawadeeka)’ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக டீசரில் குறிப்பிட்டது. ஆனால் பின்பு இப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெயிலர்நாளை வெளியாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இப்படத்தை இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடும் பிளானில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.