The film crew released the update of the Vijay Antony film

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் வெளியானது. தொடர்ந்து 'அக்னிக் சிறகுகள்', 'ரத்தம்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வள்ளி மயில்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை டி.என். தாய் சரவணன் தயாரிக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரிதா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 80-களில் நடக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'வள்ளி மயில்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாகவும் இதற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment