Advertisment

வெற்றிமாறன் படத்தின் பாடல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

The film crew released the song update for vetrimaaran movie

Advertisment

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெற்றிமாறன், 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து 'காக்கா முட்டை', 'அண்ணனுக்கு ஜெ', 'வடசென்னை' போன்ற வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'அனல் மேலே பனித்துளி'. ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஜூன் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் பலரும் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படம் 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

santhosh narayanan Andrea Jeremiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe