The film crew released the much-anticipated Vijay song

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஜாலி ஓ ஜிம்கானா' பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படம் வருகிற 11-ஆம் தேதி 'சன் நெக்ஸ்ட்' மற்றும் 'நெட்ஃப்ளிக்ஸ்' ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் 'அரபிக்குத்து' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே வெளியான 'அரபிக்குத்து' பாடலின் லிரிக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று தற்போது வரை 380மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் 'அரபிக்குத்து' வீடியோ பாடலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment