Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

Advertisment

இதையடுத்து படத்தின் மீதானவிமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்துஇப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment