Advertisment

பைட் கிளப் வரவேற்பும் வசூலும்!

 Fight club movie collection

Advertisment

உறியடி விஜய்குமார் நடிப்பில் அப்பாஸ் ஆர். அஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபைட் கிளப்’. இப்படத்தில் கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஜி-ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் முதல் படமாக வழங்குகிறார்.

இப்படம் குறித்து ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சூர்யா போன்றோர் இப்படத்தைப் பற்றி தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது இப்படம் திரையரங்குகளில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் மூன்று நாள் வசூல் ஐந்தரை கோடியை தாண்டியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பிலும் ஜி-ஸ்குவாட் சார்பாக வழங்கப்பட்ட முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

lokesh kanagaraj fight club movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe