Advertisment

பிரபல நடிகரை பார்க்க சைக்கிளில் பயணம் செய்த பெண்; சந்திப்பில் நடந்த நெகிழ்ச்சி தருணம்

451

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நான்கு தசாப்தங்களாக நடித்து வருகிறார். முன்னணி நடிகரான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இப்போது விஸ்வம்பரா, உள்பட மொத்தம் நான்கு படங்களை வைத்துள்ளார். கடந்த 22ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Advertisment

இந்த நிலையில் சிரஞ்சீவியை நேரில் பார்க்க ஒரு பெண் ரசிகை சைக்கிளில் பயணம் செய்துள்ளார். ஆந்திர பிரதேசம், அதோனி என்ற நகரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் சிரன்ஹ்சீவியை பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கி.மீ. தூரம் ஹைதராபாத் வரை சைக்களில் பயணம் செய்துள்ளார். இதை கேள்விபட்ட சிரஞ்சீவி அந்த ரசிகையை சந்தித்து மகிழ்ந்துள்ளார். 

452

ரசிகையின் அன்பால் நெகிழ்ந்து போன சிரஞ்சீவி, அவருக்கு அன்பளிப்பாக ஒரு புடவையை பரிசளித்தார். மேலும் அவரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். இதனிடையே சிரஞ்சீவிக்கு அந்த பெண் ராக்கி கட்டி மகிழ்ந்தார். அதோடு சிரஞ்சீவியின் உறுதிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். 

fans chiranjeevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe