
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்த நிலையில் அதில் ஃபெப்சி அமைப்புக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதற்கு ஃபெப்சி எதிர்ப்பு தெரிவித்தது. இவர்களோடு நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இதனை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ஆர்ப்பாட்டம் அன்று படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடைக்ஷன் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் ஆர்.கே. செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் ராதாரவி, பேரரசு, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.கே.செல்வமணி பேசுகையில், புதிய தொழிலாளர்கள் வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார். மேலும் புதிய சங்க விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.