Skip to main content

“அன்று வந்த அந்த ஃபோன் கால்...” - விபத்து குறித்து எமோஷ்னலான பாத்திமா விஜய் ஆண்டனி  

 

 Fathima vijay antony Speech at Pichaikkaran 2 Pre Release Event

 

'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், சசி மற்றும் மோகன் ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

 

நிகழ்வில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா பேசியதாவது, ”எங்களுடைய பட விழாக்களில் பொதுவாக நான் மேடையேறுவதில்லை. இப்போது நான் மேடையேறி சிரித்துக் கொண்டிருக்கிறேன். இறைவனுக்கு கோடி நன்றிகள். உங்களைப் போன்ற பல கோடி நல்ல உள்ளங்கள் எங்களுக்காக இருக்கிறீர்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். மாட்டுப் பொங்கலன்று விஜய் ஆண்டனியின் விபத்து குறித்து எனக்கு ஃபோன் வந்தது. அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்றும், சுயநினைவு இல்லாமல் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார் என்றும் சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தார்கள். அதோடு அத்தனையும் முடிந்தது என்றுதான் நினைத்தேன்.

 

பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் அப்போது நிறைய பாசிட்டிவாகப் பேசினர். அத்தனை பேரும் என்னைத் தேற்றினர். அதன் பிறகு நடந்தது அனைத்தும் உங்களுக்குத் தெரியும். இப்போது அவர் நம் அனைவரின் முன்னும் அமர்ந்திருக்கிறார். கடவுள் மற்றும் உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் வாழ்த்துகளும்தான் இதற்குக் காரணம். வாழ்க்கையில் நல்ல கொள்கைகளைப் பின்பற்றுபவர் அவர். அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் மிக்க நன்றி.