இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் "ஆர்.ஆர்.ஆர்". 300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் "ஆர் ஆர் ஆர்" படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் "ஆர் ஆர் ஆர்" திரைப்படம் 1920களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது. "RRR" என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹாஷ் டேக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்கின்றனர் படக்குழுவினர்.