/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/566_3.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்றதோடு, உலகளவில்ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களானபாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃ ப்2' படம் இணைந்துள்ளது.
இதனிடையே பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் சலார் படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியாபடமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படம் கடந்த ஏப்ரல் மாதமேவெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக இப்படத்தின் பணிகள் முடங்கியதால், ரிலீஸ் தள்ளிப்போனது.மேலும் படத்தின் க்ளிம்பஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இதனால் விரக்தியடைந்த பிரபாஸ் ரசிகர் ஒருவர் படக்குழுவிற்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நாங்கள் மனவேதனையிலும், ஏமாற்றத்திலும் உள்ளோம். க்ளிம்பஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ஒருமாதமாகியும் படம் குறித்த எந்த அறிவிப்பையும் இயக்குநர் பிரசாந்த் நீலோ அல்லது படத்தை தயாரிக்கும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமோ வெளியிடவில்லை. இதே போன்றுதான் பிரபாஸின் சஹா, ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கும் நடந்தது. அதனால் இந்த மாதத்திற்குள் சலார் படத்தின் க்ளிம்பஸ் வீடியோவை வெளியிடவில்லை என்றால் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ராதே ஷ்யாம் படத்தின்தோல்வியால் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ரசிகர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளது படக்குழுவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)