Published on 02/09/2020 | Edited on 02/09/2020

பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி. பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாகினார். கடைசியாக தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் சாய் பல்லவி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றிற்கு தேர்வெழுத வந்துள்ளார் சாய் பல்லவி. அப்போது அங்கிருந்து சக தேர்வர்கள் அவரை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டனர். இதையடுத்து சாய் பல்லவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. நடிகையாக இருக்கும் சாய் பல்லவி வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.