Advertisment

"அண்ணா மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு" - விஜய் வீட்டின் முன்பு கண்ணீர் மல்க நின்ற ரசிகை

fans request to vijay infront of him house

நடிகர் விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

தனது ரசிகர்களை சமீபகாலமாக அடிக்கடி சந்தித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் விஜய். வாரிசு பட ஆடியோ விழாவில் மேடையில் மட்டும் ஏறி பேசிவிட்டு செல்லாமல் அரங்கத்தில் இருக்கும் ரசிகர்களை பார்க்கும் விதமாக சுற்றி வந்து மகிழ்வித்தார். அண்மையில் ஒரு குழந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்தக் குழந்தையின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றினார்.

Advertisment

இந்த நிலையில் ஒரு ரசிகை சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்பு நின்று கொண்டு அவரைப் பார்க்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "காஞ்சிபுரத்தில் இருந்து உங்களை பார்க்க வந்திருக்கிறேன். உங்களை எப்படியாச்சும் பார்த்து விடனும் அண்ணா. உங்கள நேர்ல தான் பார்க்க முடியல. இப்போது உங்க வீடு கேமரா முன்னாடி பேசுறேன். உங்க வீடு வரையும் வந்துட்டேன். உங்களை பார்த்து ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்தா போதும் அண்ணா. ப்ளீஸ்..." என கண் கலங்கி கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த ரசிகை கோரிக்கை வைத்ததை வீடியோ எடுத்த நபர், விஜய் மீது அவ்ளோ நம்பிக்கையா என அந்த ரசிகையை பார்த்து கேட்க, "ஆமாம்... அண்ணா மீது அவ்ளோ நம்பிக்கை இருக்கு. அவர் கண்டிப்பா இந்த வீடியோ பார்த்து கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளேன்" என பதிலளிக்கிறார்.

fans actor vijay
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe