
சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம், இந்த அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப்போகிறது. இதுகுறித்து நடிகர் சூர்யா சமூகவலைதளத்தில் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்திற்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாகப் படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தீபாவளி வெளியீடாக 'சூரரைப் போற்று' படம் இருக்கட்டும் என அமேசான் நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து நவம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து அமேசான் ப்ரைம் நிறுவனத்தை டேக் செய்து ரசிகர் ஒருவரின் பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை வீட்டில் தியேட்டர் எஃபெக்ட்டில் பார்க்க வேண்டும் என்பதற்காக லட்ச ரூபாய் செலவு செய்து நல்ல ஸ்பீக்கர்களை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பதிவிட்டு, “ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள். இந்த அருமையான படத்தைப் பார்ப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து கருவிகளை வாங்கியுள்ளேன். என் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க” என்று தெரிவித்துள்ளார்.