
நடிகர் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’படம் இன்று வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு என் கட்டவுட்டுக்கு பால் ஊற்ற வேண்டாம். அதற்கு பதிலாக பெற்றோருக்கு நல்ல உடை வாங்கி தாருங்கள் என்றார்.
அதனை அடுத்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில், எனக்கு இருக்கிற ஒன்னு இரண்டு ரசிகர்கள் அண்டாவில் பால் ஊற்றுங்கள் என்றார். இந்த இரண்டு வீடியோக்களால் ரசிகர்கள் குழம்பியிருக்க பிறகு சிம்பு அதற்கு விளக்கம் தந்தார். அதில், நான் எனக்கு பால் ஊற்ற சொல்லவில்லை, படம் பார்க்க வருபவர்களுக்கு பால் கொடுங்கள் என்று சொன்னார். யாரும் எனக்கு இதுபோல பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துகொண்டார்.
இந்நிலையில், இன்று வெளியான இந்த படத்திற்கு வந்த ரசிகர்கள் ஒரு சில இடங்களில் சிம்பு பேச்சை மீறியும் கட்டவுட்டில் பால் ஊற்றினார்கள். இதேபோல ஒரு சில இடங்களில் சிம்பு சொன்னதுபோன்று அண்டாவில் பால் கொண்டுவந்து பொதுமக்களுக்கு தந்திருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.