Advertisment

திருமணம் செய்துகொள்ள ரெடி; ரஜினி படம் பார்த்து ஏக்கத்துடன் கடிதம் எழுதிய ரசிகை

fans letter about rajini Yajaman movie

ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்தயாரிப்பில் ரஜினி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான படம் எஜமான். உதயகுமார் இயக்கியிருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 175 நாள் திரையரங்குகளில் ஓடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் 'ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்' தனது ட்விட்டர் பக்கத்தில், "80களில் பொதுமக்களிடமிருந்து திரைப்பட விமர்சனங்கள் குறைவாக இருந்தன. அது அரிதாகவே காணப்பட்டது. அதனால் எஜமான் படம் பற்றிய விமர்சனங்களை அஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்புமாறு ஸ்ரீ எம். சரவணன் மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது நிறைய கடிதங்கள் வந்தது. அதில் ஒன்று" என ஒரு பெண்மணி எழுதிய கடிதத்தை பகிர்ந்திருந்தது.

Advertisment

அந்தக் கடிதத்தில், "சார்நான் திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன். சார் சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்துகொண்டு திரும்பவும் முதலில்என் கணவரோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளித்திரையில் அழியா கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட உதயகுமாருக்கு வைர கீரிடம் தான் சூட்ட வேண்டும். இக்கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது உறுதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் எஜமான் படம் 30 வருடங்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth fans
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe