Skip to main content

திருமணம் செய்துகொள்ள ரெடி; ரஜினி படம் பார்த்து ஏக்கத்துடன் கடிதம் எழுதிய ரசிகை

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

fans letter about rajini Yajaman movie

 

ஏவிஎம் ப்ரொடக்‌ஷன் தயாரிப்பில் ரஜினி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான படம் எஜமான். உதயகுமார் இயக்கியிருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 175 நாள் திரையரங்குகளில் ஓடியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் 'ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்' தனது ட்விட்டர் பக்கத்தில், "80களில் பொதுமக்களிடமிருந்து திரைப்பட விமர்சனங்கள் குறைவாக இருந்தன. அது அரிதாகவே காணப்பட்டது. அதனால் எஜமான் படம் பற்றிய விமர்சனங்களை அஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்புமாறு ஸ்ரீ எம். சரவணன் மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது நிறைய கடிதங்கள் வந்தது. அதில் ஒன்று" என ஒரு பெண்மணி எழுதிய கடிதத்தை பகிர்ந்திருந்தது. 

 

அந்தக் கடிதத்தில், "சார் நான் திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன். சார் சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்துகொண்டு திரும்பவும் முதலில் என் கணவரோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளித்திரையில் அழியா  கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட உதயகுமாருக்கு  வைர கீரிடம் தான் சூட்ட வேண்டும். இக்கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது உறுதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் எஜமான் படம் 30 வருடங்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சூப்பர்ஸ்டார் - லோகி சம்பவம் ஸ்டார்ட்’ - வெளியான அறிவிப்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Coolie shooting starts

ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தின் மூலம் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைந்து நடித்து வந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த மாதம் இறுதியில் ரஜினிகாந்த் அந்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளியானது. 

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்ட்டர்களான அன்பரிவ் இந்த படத்திலும் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கூறியதாவது, ‘சூப்பர் ஸ்டார்- லோகி சம்பவம் ஆரம்பம்... கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது’ என அறிவித்துள்ளது. 

Next Story

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலகிருஷ்ணா

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
balakrishna to act in jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.