Advertisment

சூர்யா வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்

288

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூர்யா. விஜய், அஜித் என்ற முன்னணி நடிகர்கள் இருக்கும் மத்தியில் அவர்களுக்கு பிஸ்னஸ் ரீதியில் போட்டியாளராக மாறியவர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இணையாக மாஸ் இமேஜை பெற்றவர். இப்போதும் அந்த மாஸ் இமேஜை தக்க வைத்து வருகிறார். 

Advertisment

இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ மற்றும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படம் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்று அவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே சூர்யாவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் சென்னையில் உள்ள சூர்யா இல்லத்தில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். வீட்டின் முன்பு கூடிய அவர்களை சூர்யா வீட்டின் மாடியில் இருந்து பார்வையிட்டார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவர்களுக்கு நன்றி கூறினார் சூர்யா. பின்பு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

birthday fans actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe