/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PRI44.jpg)
தெலுங்கு திரைப்பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில்சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது 'பிரின்ஸ்' திரைப்படம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் சுப்பு, ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கடந்த ஒரு வாரங்களாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில்இன்று (21/10/2022) அதிகாலை 'பிரின்ஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, மேளதாளங்கள் முழங்க கொண்டாடினர். தமிழகத்தில் 600- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் படம் வெளியீட்டு உரிமை கோபுரம் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று காலை ரோகினி திரையரங்கத்திற்கு சென்றிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் அமர்ந்து படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்தார். அப்போதுதிரைப்படத்தின் பாடல் ஒளிபரப்பானபோது, சிவகார்த்திகேயன் இருக்கையில் இருந்துஎழுந்து நின்று ஆரவாரம் செய்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், திரையரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பி கோஷமிட்டனர்.
படம் முடிந்து வெளியே வந்து,அவரை சூழ்ந்துகொண்டரசிகர்கள்SK...SK... என்று கூச்சலிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)