nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் துவங்கியது. சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அதில், நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

Advertisment

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா இருக்கும் தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள், அங்கே பெரிய அளவில் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாகத் திரண்டதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் படக்குழுவினர் திணறினர். இதனையடுத்து, படக்குழு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களுக்கும் அங்கே திரண்டிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதமாக நீண்டது. இதனால், வரும் நாட்களில் பாதுகாப்பு பணிகளுக்காககூடுதலான ஆட்களை நியமிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத்தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள்.

Advertisment