ஹீரோக்களை மையமாக கொண்ட படங்களுக்கே கமெர்ஷியலாக வரவேற்புக் கிடைத்துவந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் ஹீரோயின் கேரக்டரை மையமாக கொண்டு வெளியான ‘மாயா’-வின் வெற்றி தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெண்களை மையமாக கொண்ட படங்கள் மீது நம்பிக்கைக் கொடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக அந்த மெயின் ஹீரோயின் நயன்தாராவாக இருந்தால் அதற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அறம், டோரா, கோலமாவு கோகிலா என தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான ஹீரோயின் பேஸ்டு படங்கள் நிதர்சன வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் அடுத்ததாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐரா’படம் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஐரா படத்தை லக்ஷ்மி, மா, போன்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் யூ ட்யூப்-ல் பிரபலமான கே.எம்.சர்ஜூன் இயக்கியிருக்கிறார். இவர் இதற்குமுன் ‘எச்சரிக்கை’என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். ஐரா படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ட்ரையிலர் வெளியானதிலிருந்தே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய ‘ஐரா’படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. நயன்தாராவின் ஆக்டிங், யோகிபாபு காமெடி, மாயா மாதிரி ஒரு ஹாரர் படம் என நிறைய எதிர்ப்பார்ப்புகளில் படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து மாறுபட்ட விமர்சன்ங்கள் வருகின்றன.
“பெண்கள் இந்த சமுதாயத்துல என்ன கஷ்ட படுறாங்கனு தெளிவா சொல்லியிருக்காங்க”,“ஒரு முறை பார்க்கலாம்”,“கருப்பு நயன்தாரா கேரக்டர் சூப்பர்”,“க்ளைமேக்ஸ் நல்லாயிருக்கு” என பாசிட்டிவான விமர்சனங்கள் ஒருபக்கமும்,
“நயன்தாரா தவிர படத்தில் ஒன்னுமே இல்ல”,“நயன்தார, கலையரசன் ஆக்டிங் சூப்பர், அதை டைரக்டர் வேஸ்ட் பண்ணிட்டார்”,“எல்லா பேய் படம் போலவும் அதே ஃபிளாஷ் பேக், அதே மாதிரி கதை”,“யோகிபாபு காமெடி எதுவும் பெருசா ஒர்க்கவுட் ஆகலை”,“ஹாரர் ஒன்னும் பெருசா இல்லை” என்பது போன்ற நெகட்டிவ்வான விமர்சனங்கள் ஒருபக்கமும், “ஃபர்ஸ்ட் ஹாஃபில் ஹாரர் இருந்துச்சு, செகைண்டு ஃஹாப்பில் செண்டிமெண்ட் இருந்துச்சு”,“நயன்தாராவுக்காக படம் எடுத்ததுபோல் இருந்தது” என்று கலவையான விமர்சனங்களும் வருகின்றன. மொத்ததில் நயன்தாராவின் ஹாரர் படம் என்ற எதிர்ப்பார்ப்பை ஐரா பூர்த்திசெய்யவில்லை என்பதையேபொதுவான விமர்சனமாக கூறுகின்றனர்.