/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/322_11.jpg)
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் 'ஜேம்ஸ்' என்ற படத்தில் நடித்து வந்த நிலையில்தான் அவர் உயிரிழந்தார். இருப்பினும் இப்படத்தின்பணியை தொடர்ந்தபடக்குழு புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமாரைடப்பிங் பேச வைத்தனர். இதனிடையே வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையேபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின்பிறந்தநாளானஇன்று(17.3.2022) 'ஜேம்ஸ்' படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படம் புனித் ரசிகர்கள் கடைசி பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. மறைந்த புனித் ராஜ்குமாரைதிரையில் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி அவரது நாயகனை கொண்டாடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)