julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக வலைதள மீம்ஸ்களின் மூலமாக தமிழச்சி என்று வெகுவாக வைரலானவர் ஜூலி. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு, பிரபலமடைந்தார்.

Advertisment

பிக்பாஸை அடுத்து அனிதா எம்.பி.பி.எஸ்., அம்மன் தாய் மற்றும் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படங்கள் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜூலிக்கு சமூக வலைதளத்தில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் ஜூலியின் புகைப்படத்தை, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.