A fan who traveled 1750 km to see Allu Arjun

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் அல்லு அர்ஜூனை பார்க்க 1750 கி.மீ. பயணம் செய்துள்ளார் ஒரு ரசிகர். உத்தரப் பிரதேசம் அலிகார் பகுதியில் இருந்து ஹைதராபாத் வரை சைக்கிளில் 1750 கி.மீ. பயணம் செய்து சென்றுள்ளார். பின்பு அல்லு அர்ஜூனை பார்த்ததும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு பூச்செடி பரிசாக வழங்கினார் அல்லு அர்ஜூன். இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ரசிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பொதுவாக ரசிகர்கள் தங்கள் விருப்ப நாயகர்களை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதில் சிலர் தீவிர முயற்சியாக இது போன்ற பயணங்களை மேற்கொள்வார்கள். அதன் மூலம் வெற்றியும் அடைந்துவிடுவார்கள். கடந்த ஆண்டு சல்மான் கானை பார்க்க அவரது ரசிகர் ஒருவர் மத்தியப்பிரதேசத்திலிருந்து சைக்கிளில் 1000 கி.மீ. பயணம் செய்து மும்பைக்கு சென்று அங்கு சல்மான் கானை பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.