Advertisment

"எதாவது கிடைக்குமா..." படத்தைப் பார்த்து பங்கு கேட்ட ரசிகர் - ஷாக்கான ஷாரூக்கான்

A fan who saw pathaan movie and asked money share to shahrukh khan

Advertisment

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவர் நடித்துள்ள 'பதான்' படம் பல சர்ச்சைகளைத் தாண்டி சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகளவில் மொத்தம் ரூ.729 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே சமுக வலைதளத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி பேசி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ஷாரூக்கானிடம் ரசிகர் ஒருவர், "பதான் படத்தை 5 முறை பார்த்துவிட்டேன். இன்னும் 5 முறை பார்க்க விரும்புகிறேன். படம் மொத்தம் 700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதில் இருந்து எதாவது எனக்கு பங்கு கிடைக்குமா" என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், "பணம் இல்லை... படம் என்பது ஒரு பொழுதுபோக்கு தான். பணத்துக்காக வேறு வேலை எதாவதுசெய்" என பதிலளித்துள்ளார்.

Advertisment

சில ரசிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் உள்ளிட்டவர்களை பற்றி கேட்க, அனைவரையும் பாராட்டிப் பதிலளித்திருந்தார் ஷாருக்கான்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe